×

காய்கறி கடையை சூறையாடிய காட்டு யானை: சேரம்பாடியில் வியாபாரிகள் கடையடைப்பு

பந்தலூர்: காய்கறி கடையை காட்டு யானை சூறையாடியதை கண்டித்து சேரம்பாடியில் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சுறுத்துவதுடன், ரேஷன் கடைகள் மற்றும் காய்கறி கடைகளை உடைத்து சேதப்படுத்துவது, விளைநிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது மற்றும் மனித உயிர்களை பலி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு சேரம்பாடி பஜாரில் உள்ள காய்கறி கடை ஷட்டரை உடைத்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த காய்கறிகளை சூறையாடி வெளியே இழுத்து போட்டு, கால்களால் மிதுத்தும், தின்றும் சேதப்படுத்தியது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை விரட்ட கோரியும், காட்டு யானைகளிடம் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி வனத்துறையை கண்டித்து, சேரம்பாடி பஜாரில் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post காய்கறி கடையை சூறையாடிய காட்டு யானை: சேரம்பாடியில் வியாபாரிகள் கடையடைப்பு appeared first on Dinakaran.

Tags : Cherambadi ,Bandalur ,Serambadi ,Pandalur ,Dinakaran ,
× RELATED டேன்டீ தேயிலைத் தோட்ட பரப்புகளை...